தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க-வுக்கும் அதன் தலைவராக 50 ஆண்டுக்காலம் இருந்த மு.கருணாநிதிக்கும் தனியான, மிகப்பெரிய ஓர் அத்தியாயம் உண்டு. கருணாநிதியின் இல்லத்துக்கு ஜெயலலிதா இருந்தவரை, எந்தவோர் அமைச்சரோ அல்லது அ.தி.மு.க நிர்வாகிகளோ சென்றதாக வரலாறு கிடையாது. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், இப்போது கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று உடல் நலத்தை விசாரித்தது அரசியல் அரங்கிலும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Fair politics made by Karunanidhi.